திருப்பதியில் 19ஆம் தேதி ரதசப்தமி : 11ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19 ம் தேதி நடைபெறும் ரத சப்தமி உற்சவ வைபவத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு 11ம் தேதி முதல் துவங்கும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதி ரதசப்தமி வைபவம் நடக்க உள்ளது. இதையொட்டி காலை 5 முதல் இரவு 10 மணி வரை சூரிய பிரபை, சந்திரப் பிரபை, கற்பக விருட்சம் என ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளதால் இதனை மினி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்பதுண்டு. இந்த உற்சவத்தைக் காணவும் ஏழுமலையானைத் தரிசனம் செய்யவும் டிக்கெட் முன்பதிவு நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் தோன்றுகிறது. பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in முன்பதிவு செய்து கொள்ளலாம் இதற்காக 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்திற்கான மீதமுள்ள நாட்களில் தினமும் 5 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading திருப்பதியில் 19ஆம் தேதி ரதசப்தமி : 11ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்ணுறுப்பில் அரிப்பா? வெள்ளைப்படுகிறதா? இதை சாப்பிடுங்க... குணம் கிடைக்கும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்