செல்போனில் கிளிக் இளைஞருக்கு நடுரோட்டில் செருப்படி

செல்போனில் தன்னை படம்பிடித்த இளைஞருக்கு நடுரோட்டில் செருப்படி கொடுத்து பாடம் புகட்டினார் மாணவி ஒருவர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தினமும் அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்து சந்தியா வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் ஆட்டோவை பின்தொடர்ந்து சந்தியாவைத் தனது செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.

ஆட்டோவை விட்டு இறங்கி அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது இளைஞர் படுவேகமாக பைக்கில் சென்றுவிட்டார். இதையடுத்து சந்தியா மற்றும் ஆட்டோ டிரைவர் ஊர் மக்களுக்குத் தகவல் கொடுத்து பைக்கில் வந்து கொண்டிருக்கும் இளைஞரைப் பிடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து ஊர் எல்லையில் அந்த இளைஞர் கிராம மக்களால் பிடித்து வைக்கப்பட்டார். சிறிது நேரத்தில் ஆட்டோவில் வந்த மாணவி சந்தியா நடுரோட்டில் வைத்து அந்த இளைஞரைத் தனது செருப்பால் மாறி மாறி அடித்தார்.
பின்னர் பொதுமக்கள் சிலரும் தங்கள் பங்குக்கு அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர் இதன் பின்னர் போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னை பின் தொடர்ந்து படமெடுத்த மாணவரை இளைஞரை மாணவி சந்தியா செருப்பால் அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

You'r reading செல்போனில் கிளிக் இளைஞருக்கு நடுரோட்டில் செருப்படி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? தமிழிசை பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்