பெட்ரோல் விலை உயர்வு : பிரதமரை பாராட்டும் கம்யூனிஸ்ட் கட்சி

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு நன்றிடும் வாழ்த்தும் தெரிவித்துக் கிண்டல் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் தென்காசி மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது 93 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் இம்மாத இறுதிக்குள் செஞ்சுரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. சமையல் காஸ் விலையும் அதே வேகத்தில் உயர்த்தப்பட நடுத்தர ஏழை மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் என்னதான் போராட்டம் நடத்தினாலும் அரசு அதைக் கண்டு கொள்வதே இல்லை. இந்த நிலையில் பெட்ரோல் விலையை விரைவில் 100 ரூபாய்க்குக் கொண்டுவர இருக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி.. வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு என்று கிண்டலாக போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள் தென்காசி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். தென்காசி மாவட்டம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் சிறிது நேரம் கூப்பாடு போட்டு விட்டுக் கலைந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட கம்யூனிஸ்டுகள் காலத்திற்கேற்ப தங்களது போராட்டத்தை மாற்றிக்கொண்டு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இப்படி போஸ்டர் ஒட்டி இருப்பது பலர் வரவேற்க வைத்துள்ளது.

You'r reading பெட்ரோல் விலை உயர்வு : பிரதமரை பாராட்டும் கம்யூனிஸ்ட் கட்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது ரோகித் சர்மாவுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் பிரபல கிரிக்கெட் வீரர் கூறுகிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்