திருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை எடுத்து இதற்கான அனுமதி கேட்டு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.தேவஸ்தானத்தின் பரிந்துரையைப் பரிசீலித்த அரசு திருப்பதி மலைப்பாதையில் செல்வதற்கு காருக்கு ரூ .15 லிருந்து ரூ .50 ஆகவும், மினி பஸ் மற்றும் மினி லாரிக்கு ரூ .50 லிருந்து ரூ .100 ஆகவும் உயர்த்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

You'r reading திருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்