இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்.. ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,31,650 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,95,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You'r reading இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்.. ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்த சின்ன விஷயம் கூட தெரியாதா? தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக வேட்பாளர் எழிலன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்