பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தேநீர் கடை மீனாட்சி!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் டீக்கடை நடத்தி வருபவர் மீனாட்சி. இவர், மீரட் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். இவரது கணவர் கயான் சிங் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கயான் சிங் - மீனாட்சி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவரின் சொற்ப வருமானமும் டீ க்கடையில் வரும் வருமானத்தை நம்பிதான் இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.

இந்நிலையில் அவர், உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் பஞ்சாயத்து தேர்தலில் பெண் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் இன்ஸ்பிரேசன் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வமாக உள்ள மீனாட்சி அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். அவர் போட்டியிடும் சோவாலா கிராம பஞ்சாயத்து ரிசர்வ் பஞ்சாயத்தாக வரையறுக்கப்பட்டது. இங்கு 7,000 வாக்காளர்கள் உள்ளனர்.

தேசிய ஊரக வாழ்வார திட்டத்தின் கீழ் டீக்கடை வைத்திருக்கும் மீனாட்சி. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். தனது இந்த விருப்பம் குறித்து பேசிய அவர், ``பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தேநீர் விற்ற ஒருவர் பிரதமராக முடியும் என்றால். என்னால் ஏன் அது முடியாது?.

ஒரு டீக்கடைகாரர் கிராமப் பஞ்சாயத்து தலைவராக முடியாதா.. என்ன?” என மீனாட்சி கேள்வி எழுப்புகிறார். பஞ்சாயத்து தேர்தலில் சுயேட்சையாக களம் காண்கிறார் மீனாட்சி. அவர் எந்த அரசியல் தலைவரையோ, கட்சியின் ஆதரவையோ எதிர்பார்த்து நிற்கவில்லை. மேலும்,கிராம மக்களின் முழு ஆதரவு தனக்கு இருப்பதாக மீனாட்சி கூறுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றால் கிராம வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீனாட்சியின் கணவர் கயான் சிங் பேசுகையில், “ 2015-ம் ஆண்டு என்னுடைய மனைவி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப்பகுதியில் உள்ள மக்கள் மோடி அவர்கள் ஆரம்பத்தில் டீ விற்றார். இப்போது அவர் நாட்டின் பிரதமராக உள்ளார். நீ இந்தப் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். மீனாட்சி இப்போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்கிறார் என்றார் .

You'r reading பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தேநீர் கடை மீனாட்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரூ.10 லட்சத்திற்காக தொழிலதிபரிடம் சிறுமியை விற்பனை செய்த தாய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்