டெல்லியில் விவசாயிகள் 144 வது நாளாக போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 144 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் இருந்து “டெல்லி சலோ” என கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் நுழையாதவாறு ஹரியானா மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடுப்பு வேலிகள் தகர்த்தெறந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர் அவர்களை டெல்லிக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்தினர்.

இதேபோல் பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தலைநகரை நோக்கி படையெடுக்க தொடங்கினர், அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.ர.

இதையடுத்து அவர்கள், டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்து மாதங்களையும் தாண்டி இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 144 வது நாளை எட்டியுள்ளது.

You'r reading டெல்லியில் விவசாயிகள் 144 வது நாளாக போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்