மக்களே உஷார்..! இப்படி ஒரு தண்டனையா?? உத்தரபிரதேசம் அரசு அதிரடி அறிவிப்பு..

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உ.பி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தினசரி பாதிப்பு மூன்றரை லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் உயிரிழப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பது வேதனை அளிக்கும் செய்தியாக காணப்படுகிறது.

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதுகுறித்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 'உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக வதந்தி பரப்பினால் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You'r reading மக்களே உஷார்..! இப்படி ஒரு தண்டனையா?? உத்தரபிரதேசம் அரசு அதிரடி அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூதாட்டியை கொன்று சடலடத்துடன் உறவு.. கோவையை பதற வைத்த கொடூரன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்