குஜராத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்..! விஜய் ருபானி அதிரடி அறிவிப்பு..

குஜராத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தயுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு குஜராத்தில் இன்று முதல் மே 5- ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 29 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத்தில் உள்ள 20 பெரு நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் மத தலங்களில் மக்களுக்கு அனுமதி கிடையாது. பூஜைகள் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. பொது போக்குவரத்து 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு எனவும் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You'r reading குஜராத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்..! விஜய் ருபானி அதிரடி அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதி.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்