மனைவியின் நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்!

மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றியிருக்கிறார் மனிதேநேயம் படைத்த ஒருவர். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜாவத் கான், தனது ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றி நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார். இதற்காக தனது மனைவியின் நகைகளை விற்றதாக ஜாவேத் கூறுகிறார்.

இதுவரை ஜாவத் ஒன்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோவில் பயணிகளுக்கும் தனக்கும் இடையே பிளாஸ்டிக் ஷீல்டு போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். எப்போதும் சானிட்டைசர் வைத்து கைகளை கழுவி வருகிறார்.

இதுபற்றி ஜாவேத் கூறும்போது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை செய்தி சேனல் கள் மற்றும் சமூக வலைதளங்களில், பார்த்தேன். அதனால் என் ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல மாற்றி உதவ முடிவு செய்தேன். என் மனைவியின் நகைகளை விற்று இப்படி மாற்றி அமைத்துள்ளேன்.

என் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம். கடந்த 15, 20 நாட்களாக இதை செய்து கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சீரியசான 9 பேரை, என் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறேன என்று கூறுகிறார்.

ஜாவேத் கானின் ஒரு நாள் வருமானம் ரூ.200-300 ஆக இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது தன் மனைவியின் நகைகளை அடகு வைத்து சமூக சேவையாற்றி வருகிறார் ஜாவேத் கான்.
சேவையில் மூழ்கி விட்ட ஜாவேத் கான் தான் குடும்பத்துக்காக நேரம் செலவழிப்பதே குறைந்து விட்டது என்கிறார்.

இப்படியும் சிலர் இருப்பதால் தான் மனிதேநேயம் இன்னும் உயிரோடிக்கிறது என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

You'r reading மனைவியின் நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்தவாரத்தில் ஆபத்து இருக்கு! – கொரோனா குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்