தமிழகத்திற்கு 4 டிஎம்சி - கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு 4 டிஎம்சி - கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில் காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணமாக கர்நாடக தேர்தலையும், பிரதமரின் பிரசாரப் பயணத்தையும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டது.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், இதில் அரசியல் காரணம் இருக்கிறது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும், மத்திய அரசு கூறும் காரணங்களை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது.

முன்னதாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிபிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழகத்திற்கு 4 டிஎம்சி - கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 ஜிபி இலவச டேட்டா - ஐடியா அதிரடி ஆஃப்பர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்