வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு!

ஓடும் ரயிலில் இளம்பெண்ணை வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய தமிழக ஆர்பிஎப் வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் ரயிலில் சென்றார். அப்போது, ரயிலில் ஏறிய வாலிபர் ஒருவர் பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றார்.

அப்பேது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சிவாஜி அங்கு சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து காவல நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், பெண்ணை காப்பாற்றி பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சிவாஜியின் துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்கொடுமையில் இருந்து பெண்ணை காப்பாற்றி ஆர்பிஎப் வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெச்-4 விசா - பயமுறுத்தும் வேலையிழப்பு அபாயம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்