யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்ற தாஜ்மஹால்

ழமை வாய்ந்த புராதன சின்னம் தாஜ்ஹால்

தாஜ்மஹால் உலகின் பாரம்பர்யமிக்க இடங்களுக்கான யுனெஸ்கோ பட்டியலில், இரண்டாவது நினைவுச்சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு, ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அவற்றை பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது.

அந்தவகையில், உலகின் பாரம்பர்யமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மஹாலுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், “மொகலாய மன்னன் ஷாஜகான் ஆக்ராவில், பளிங்கு கல்லால் அழகிய கலைநயத்துடன் தன் மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மஹால். இதை ஆண்டுக்கு 80 லட்சம் பேர் ரசித்துப் பார்த்துச் செல்கின்றனர். எனவே, உலகின் பாரம்பர்யமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மஹால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது” என்றனர்.

சீனப் பெருஞ்சுவர், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு, உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹால் காதலர்களின் சின்னமாக, காதல் கொண்ட இதயங்களில் இடம்பெற்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

You'r reading யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்ற தாஜ்மஹால் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூகுளை அதிகம் பயன்படுத்துவோருக்கு மறதிநோய்... எச்சரிக்கும் ஆய்வாளர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்