செல்போனில் பேசியபடி கார் ஓட்டுவது குற்றச்செயல் இல்லை: நீதிமன்றம்

விபத்தை ஏற்படுத்தாத வரை செல்போனில் பேசியபடி கார் ஓட்டுவது குற்றச்செயல் ஆகாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும், நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விதிகளையும் கடுமையாக்கி வருகின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் துயரமும் ஏற்படுகிறது.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமாக கருத ப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கேரளா, காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியபடி கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கினார். இதனால், போலீசார் சந்தோஷ் மீது சட்டம் 118ன் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டினால் சட்டப்படி குற்றம் என்று தெரிவித்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தோஷ், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், “செல்போன் பேசியபடி கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ, ஆபத்தோ ஏற்படுத்தாத பட்சத்தில் இது தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியாது ” என்று கூறிய நீதிபதிகள், ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading செல்போனில் பேசியபடி கார் ஓட்டுவது குற்றச்செயல் இல்லை: நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குட்டி கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது - திருமாவளவன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்