ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வேலை

ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களை பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், நீராவி என்ஜின்கள், பாரம்பரிய பெட்டிகள், நீராவி கிரேன்கள், நிலைய உபகரணங்கள் உள்ளிட்டவை மீட்கவும், புதுப்பிக்கவும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு தினசரி சம்பளாக ரூ.1200 வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர்கள் ரயில்வேயின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், பழுதுகளை சரி பார்க்கவும் பணியில் அமர்த்தப்படுகின்றன. இதற்கு, நன்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே வாரியம் தனது ஒப்புதலை அளித்துள்ளது” என்றார்.

You'r reading ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வேலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்போசிஸ் நிறுவன செயல் துணை தலைவர் சங்கீதா சிங் பதவி விலகினார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்