9வது நாளில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டிவந்தார். அதுமட்டுமில்லாமல் அரசின் ஒரு வாக்குறுதியான வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்திற்கும் அம்மாநில கவர்னரும் சரிவர பிடிக்கொடுக்கவில்லை.

இதனை, டெல்லி துணை நிலை கவர்னர் கவனத்திற்கு கொண்டு செல்ல கடந்த 11ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு சென்றார். ஆனால் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கவில்லை. அதனால் கவர்னர் மாளிகையில் உள்ள வரவேற்பறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கெஜ்ரிவால்.

தர்ணாவில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். தர்ணாவில் ஈடுபட்ட சத்யேந்திர குமார், மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை கவர்னர் அனில் பைஜால் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துமாறும், அதே வேளையில் அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் தனது 9வது நாளில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

You'r reading 9வது நாளில் தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு சம்மன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்