சர்வதேச யோகா தினம்- டேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

உலகம் முழுவதும் இன்று 4வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, டேராடூனில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி யோகாசன பயிற்சி செய்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.பொதுச்சபை அறிவித்தது. பிறகு, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜூன் 21ம் தேதியான இன்று உலகளவில் 4ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பொறுத்தவரையில், சுமார் 5 ஆயிரம் இடங்களில் யேகாகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், வெளிநாடுகள், இந்திய தூதரகங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் கலந்துக் கொள்ளும் யோகா பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு யோகா பயிற்சிகளை செய்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த சுரிநாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்தார். துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மும்பையில் யோகா செய்தார்.

யோகா தினத்தையட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்லி, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலியை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டிருந்தார்.

You'r reading சர்வதேச யோகா தினம்- டேராடூன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எய்ம்ஸ் மருத்துவமனை- அப்போலோ வரவேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்