மணிப்பூரில் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து

வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவையை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் வெடித்து வருகிறது. இதற்கு வதந்திகளே காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பரவி வரும் வதந்திகளால் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணிப்பூர் மாநில உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால், அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

இதுபோன்ற வதந்திகள், அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (நேற்று) முதல் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்படுகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading மணிப்பூரில் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இத்தனை லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்