ஸ்பைஸ்ஜெட் நிறுவன விவகாரம்- கலாநிதி மாறனுக்கு இழப்பீடு இல்லை

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனக்கும் தன்னுடைய கே.ஏ.எல் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட இழப்பை மீட்டுத் தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஸ்பைஸ்ஜெட் உரிமையாளர் கலாநிதி மாறம் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது  இந்த வழக்கின் மீதான விசாரணையில் கலாநிதி மாறனுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, ஸ்பைஸ் ஜெட்டின் பெரும் பகுதி பங்குகள் கலாநிதி மாறனின் கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்தது. ஆனால், அன்றைய பண நெருக்கடி காரணமாக 58.46 சதவிகித பங்குகளை அஜய் சிங் என்பவருக்கு கே.ஏ.எல் நிறுவனம் விற்றது.

அப்போது பல்வேறு காரணங்களுக்காக கலாநிதி மாறன், 679 கோடி ரூபாயை ஸ்பைஸ் ஜெட் நிறுவனதுக்கு கொடுத்ததாகவும், அந்தத் தொகை திரும்ப தரப்படவில்லை என்றும் கலாநிதி மாறன் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கு ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தது.

நடுவர் மன்றம் விசாரணை முடிந்துள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் அதற்காக அந்நிறுவனம் எந்த ஒரு இழப்பீடும் கலாநிதி மாறனுக்குத் தர வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

You'r reading ஸ்பைஸ்ஜெட் நிறுவன விவகாரம்- கலாநிதி மாறனுக்கு இழப்பீடு இல்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்