சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதனை கண்டுக்கொள்வதாக இல்லை.

இதையடுத்து, தெலுங்கு சேதம கட்சி மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால், எம்பிக்களின் ஆதரவு கிடைக்காததால் இந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இன்று ஆந்திரா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து, முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You'r reading சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - படிக்கட்டில் தொங்கியபடி மின்சார ரயிலில் பயணம்: மின்கம்பத்தில் இடித்து 4 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்