இன்னும் 3 ஆண்டுகளில் வீடு இல்லா அனைவருக்கும் வீடு: பிரதமர் மோடி

2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நகர்புற நிலப்பரப்பு மாற்றம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும். வீடு என்ற இலக்கை அடைவதற்காக நகர்புறங்களில் 54 லட்சம் வீடுகளும், கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் சௌகரியமாக வாழ்வதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

தற்போது 75 சதவீதம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், வரும் காலங்களில் இதைவிட வேகமாக வளர்ச்சியடையும்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடும்போது ஒருவர் கூட வீடு இல்லாமல் இருக்க கூடாது. இந்த இலக்கை அடையா நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading இன்னும் 3 ஆண்டுகளில் வீடு இல்லா அனைவருக்கும் வீடு: பிரதமர் மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதியை சந்திக்க இன்று சென்னை விரைகிறார் வெங்கையா நாயுடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்