குடியரசு தினத்தில் பங்கேற்க ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்தார் மோடி

2019ம் ஆண்டு குடியரசு தினத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக, 2015ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை குடியரசு தினத்தில் பங்கேற்க மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஒபாமா பலத்த பாதுகாப்பின் மத்தியில் குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

அமெரிக்க உடனான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். வரும் 2019ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வதற்காக, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், மோடியின் அழைப்பு தொடர்பாக இதுவரை ட்ரம்ப் தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

You'r reading குடியரசு தினத்தில் பங்கேற்க ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்தார் மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டிலேயே சுகப்பிரசவம்... ஹீலர் பாஸ்கர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்