லாலு பிரசாத் சரணடைய ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவு

லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் முடிவடையும் நிலையில் வரும் 30ம் தேதி சரணடைய வேண்டும் என்று ஜார்க்கண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆட்சியின்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி குற்றச்சாட்டை உறுதி செய்ததை அடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு 5 வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை அனுவதித்து வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், அவர் தனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த ஓய்வு காலம் முடிவடையும் நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் லாலு பிரசாத் சார்பில் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் நீட்டிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வரும் 30ம் தேதி லாலு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

You'r reading லாலு பிரசாத் சரணடைய ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்ற தேர்தல்... தேமுதிக தனித்து போட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்