பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

2017-18 ஆண்டுக்கான சொத்து மதிப்பு குறித்து பிரதமர் மோடி தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 2017-18 ஆண்டுக்கான வருமான தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் மோடியிடம் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் என்றும், குஜராத்தில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.11 லட்சம் இருப்பு தொகை உள்ளது என்றும், அதே கிளையில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் பத்திரங்கள் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மோடியிடம், ரூ. 48,944 கையிருப்பாக உள்ளது என்றும், ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி பாலிசி ஒன்றும் உள்ளது.

மேலும் தங்க மோதிரங்கள் 4 வைத்துள்ளார் என்பதும், அதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் இருக்கும் என்றும், பிரதமர் பதவி ஏற்றதும் அவர் எந்த ஒரு தங்க ஆபரணங்களையும் வாங்கவில்லை என்பதும் தெரிவித்துள்ளார்.

மோடியின் பெயரில் எந்த ஒரு நான்கு சக்கர வாகனமும் இல்லை என்றும் வங்கிகளில் அவரின் பெயரில் எந்த ஒரு கடனும் பெற்றதில்லை என்றும் தாக்கல் செய்துள்ள வருமான வரி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆக, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் இரண்டரை கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பக்தர்கள் வருகை எதிரொலி: சபரிமலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்