வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 50 % குறைவு: ஐ.நா தகவல்

இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் 2018ம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து ஐ.நா.சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கடந்த 2005 - 2006ம் ஆண்டிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளின் வறுமைக் கோட்டிற்கு கீழ் சுமார் 27 கோடி பேர் வளர்ச்சியடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிலிருந்து வளர்ச்சியடைந்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைதவிர, சர்வதேச அளவில் சுமார் 130 கோடி பேர் உணவு, சுகாதாரம் உள்பட பல பிரிவுகளின் வறுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா மட்டுமே இந்த பத்து ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து கணிசமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

You'r reading வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 50 % குறைவு: ஐ.நா தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடூர நோய்களைத் தீர்க்கும் பூலோக அமிர்தம் எது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்