நானும் ரவுடி தான்- ஸ்டாலினை கலாய்க்கும் ஜெயக்குமார்

நானும் ரவுடி தான் என மனோபாவத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.


சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுகவுக்கு அரசியல் பண்பாடு நாகரீகம் கிடையாது. பதவி வெறி, ஆதங்கத்தோடு இருப்பது ஸ்டாலின் செயல்பாட்டில் தெரிகிறது. எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது"

"விழாவில் கலந்துக்கொள்வது அவருடைய விருப்பம். ஸ்டாலின் நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் செயல்படுகிறார். பல்வேறு ஊழல்களை செய்தது திமுக ஆட்சிதான் என்பது உறுதி. வரலாற்றை ஒருபோதும் மறக்கக்கூடாது" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

"ஸ்டாலின் குடும்ப சொத்து என்ன என்பதை கணக்கு சொல்வாரா?. திமுகவுக்கு தான் நாவடக்கம் தேவை. தினம் தினம் ஸ்டாலின் சொல்லும் கடினமான வார்த்தைகளை ஒருபோதும் ஏற்க முடியாது" எனக் கூறினார்.

You'r reading நானும் ரவுடி தான்- ஸ்டாலினை கலாய்க்கும் ஜெயக்குமார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதுகலை ஆசிரியர்கள் நியமனம்- அரசாணை வெளியீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்