அசாமில், யானை மீதிருந்து தவறி விழுந்த துணை சபாநாயகர்!

அசாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநில சட்டமன்ற துணை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தனது சொந்த தொகுதியான ராதாபரி சென்ற போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் யானை மீது அவரை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக கிரிபாநாத் மல்லா யானை மீது ஏறி உட்கார்ந்தார். அப்போது, யானை திடீரென உடலை குலுக்கியபடி சென்றால், சபாநாயகர் யானை மீதிருந்து கீழே விழுந்தார்.

யானையின் பக்கவாட்டில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். யானை மீதிருந்து அவர் விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

You'r reading அசாமில், யானை மீதிருந்து தவறி விழுந்த துணை சபாநாயகர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஃபேஸ்புக் ஹேக் சம்பவம் 1000 கோடி அபராதம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்