பள்ளி பருவத்தில் பாலியல் துன்புறுத்தலா? தற்போது புகார் அளிக்கலாம்

Central ministries says Harassment in school days also can complaint now

மீ டூ என்ற இயக்கத்தின் மூலம் பல துறைகளை சார்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர். தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து தற்போது பகிர்ந்து வருவதால் சற்று நிம்மதி அடைவதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மீடூ ஆஷ் டேக் மூலம் பல அரசியல் மற்றும் சினிமா துறைகள் சார்ந்த பிரபலங்களை சிக்கியுள்ளனர்.

இப்படி பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் இவ்வளவு நாட்கள் வாய்திறக்காமல் தற்போது ஏன் மௌனம் கலைக்கின்றனர் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுகின்றன. சமூகத்தில் உள்ள முக்கிய புள்ளிகளை அவமான படுத்துவதற்கோ அல்லது சுய விளம்பரத்திற்காகவே இதுபோன்ற ஆதாரமில்லாத புகார்களை பதிவிட்டு வருவதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு அமைச்சகம் , " தங்கள் பள்ளிப்பருவத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் இப்போது கூட புகார் கூறலாம். அதற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. போஸ்கோ சட்டத்தில் அது போன்ற எந்த ஒரு கால வரம்பும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

You'r reading பள்ளி பருவத்தில் பாலியல் துன்புறுத்தலா? தற்போது புகார் அளிக்கலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யூ டியூப் இணையதள சேவை செயல்படத் தொடங்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்