டிட்லி புயல் தாக்கம் எதிரொலி: பலி எண்ணிக்கை 57 ஆனது

57 people killed in Titly storm in Odisha

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திராவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த கனமழை எதிரொலியால் சாலை எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 57ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகம் சேதமடைந்துள்ளன. ஒடிசாவில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,765 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading டிட்லி புயல் தாக்கம் எதிரொலி: பலி எண்ணிக்கை 57 ஆனது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாய்பாபாவின் மகா சமாதி தினம் இன்று..! பிரதமர் மோடி ஷீரடி வருகை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்