தசரா ரயில் விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Dussehra train accident: Rs 5 lakh for each family of victims

பஞ்சாப், அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசஸ் நகர் அருகே சவுரா பஜார் பகுதியில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் இறுதியில், பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. இது கொளந்துவுட்டு எரியும் காட்சியை ஏராளமான மக்கள் ரயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் தண்டவாளத்தின் வழியாக வந்த ரயில் மக்கள் மீது வேகமாக மோதி கடந்து சென்றது. இதில், ஏராளமான மக்கள் ரயிலின் அடிப்பட்டு தூக்கி வீசப்பட்டனர். பலர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணி க்கை 60ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ரயில் விபத்தில் பலியானோருக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading தசரா ரயில் விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்றைய (20.10.2018) ராசிபலன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்