எரிபொருளுக்கு வாட் வரி குறைப்பு இல்லை: டெல்லியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

No VAT tax reduction for fuels Full shutdown Delhi

டெல்லியில், பெட்ரோல், டீசல் விலைக்கு வாட் வரி குறைக்கவில்லை என மாநில அரசை கண்டித்து விநியோகஸ்தர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் எப்போதும் போல தற்போதும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. டெல்லி மாநில அரசு வாட் வரியை குறைக்காத காரணத்தால் கெஜ்ரிவாலின் அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் கிடைக்காமல் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.

இந்த போராட்டம் பற்றி கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டின் முக்கிய நகரங்களில் டெல்லியில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைவு. நாட்டில் மிக அதிகமாக விலை கொண்டுள்ள மும்பையில் கூட பெட்ரோல், டீசல் விலைக்காக போராட்டம் நடைபெறவில்லை. காரணம் அங்கு பா.ஜா.க. ஆட்சி நடைபெறுகிறது. எனது தலைமையிலான அரசை எதிர்ப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்.

மேலும், பெட்ரோல் டீசல் விநியோகஸ்தர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்காவிட்டால் வருமான வரி சோதனை நடத்துவோம் என பாஜகவை சேர்ந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அதற்கு பயந்தே இன்று முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளநர். ஒரு சில விநியோகஸ்தர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை சந்தித்து இதனை கூறினர் என்று கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

You'r reading எரிபொருளுக்கு வாட் வரி குறைப்பு இல்லை: டெல்லியில் இன்று முழு அடைப்பு போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாலேலோ பாடி யானையை தூங்க வைத்த பாகன்: வைரலாகும் வீடியோ

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்