மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்டவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Human shield row

காஷ்மீரில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காஷ்மீர் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத்ம் 9ம் தேதி, காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்ட ஃபாருக் அகமது தார் என்ற இளைஞரை பிடித்த ராணுவஅதிகார மேஜர் கோகாய், அவரை ஜீப்பின் முன் கேடயமாகக் கட்டி வைத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மனித உரிமயை மீறியச் செயல் என கண்டனம் குவிந்த நிலையில், ராணுவ அதிகாரிக்கு விருதும் வழங்கப்பட்டது. காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இந்த பிரச்னை குறித்து மாநில மனித உரிமை ஆணையதிடம் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த ஆணையம், ரூ.10 லட்சம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நஷ்டஈடாக தர உத்தரவிட்டது. ஆணயத்தின் தலைவர் பிலால் மஸ்கி,'' நாகரீகமான எந்த சமூகத்திலும் மனிதர்ளை கேடயங்களாக பயன்படுத்த இடம் இல்லை. குற்றவாளியைக் கூட இதுபோன்று பயன்படுத்த நம் நாட்டு சட்டத்திலும் வெளிநாட்டு சட்டத்திலும் இடமில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்டவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் குழந்தை பெற்றெடுத்த பிரிட்டன் ஆண்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்