கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல்:5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

By election for 5 constituencies began in Karnataka

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி உள்பட ஐந்து தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கியது.

கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது.

இந்த தொகுதிகளில், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதுர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிடுகின்றனர். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக உள்ளதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வரும் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல்:5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாழ்வில் வெற்றியடைய விட்டுகொடுக்க வேண்டியவை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்