நிதி மோசடி- கர்நாடகா மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்

Janardhan Reddy surrenders in Chit Fund Case

நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இன்று பெங்களூருவில் போலீசிடம் சரணடைந்தார்.

அம்பிடண்ட் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் ரூ200 கோடிக்கு மேல் பெற்று மோசடி செய்தது. இது தொடர்பாக அம்பிடண்ட் நிறுவன உரிமையாளர் பரீத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

பரீத் மீது அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் வழக்குகள் தொடர்ந்து சோதனையும் நடத்தினர். இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க ஜனார்த்தன ரெட்டியின் உதவியை பரீத் நாடினார்.

இதற்கு லஞ்சமாக ரூ57 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்துக்கு கைமாறியது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவரை பெங்களூரு நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசிய ஜனார்த்தன ரெட்டி ரூ1 கோடி லஞ்சம் கொடுத்தார்.

ப்ரீத்தின் செல்போன்களில் ஜனார்த்தன ரெட்டியின் சந்திப்பு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய பெங்களூரு போலீசார் தேடி வந்தனர்.

இதனால் ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓடி தலைமறைவானார், கடந்த ஒரு வாரமாக பதுங்கி இருந்த ஜனார்த்தன ரெட்டி இன்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தார்.

 

You'r reading நிதி மோசடி- கர்நாடகா மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து சத்தீஸ்கரை விடுவித்துவிட்டோம்: அமித்ஷா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்