இது என்னடா புதுசா இருக்கு.. பகல்ல நைட்டி போட்டா அபராதமாம் !

Women prohibited to wear nighty on daytime Andra

ஆந்திரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் பகலில் நைட்டி அணியக்கூடாது என்றும் மீறி அணிந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் இரவு நேரத்தில் தங்களின் சௌகரியத்திற்காக நைட்டி அணிந்து தூங்குவது வழக்கம். நைட்டில் மட்டும் அணியக்கூடிய உடைக்காக தான் அதற்கு நைட்டி என்று பெயர் வந்தது என்றும் கூறலாம். இப்படி இருக்கையில் பெண்கள் பகலில் நைட்டி அணிந்தால் இந்த சமூகத்திற்கு ஒரு வித முகசுழிப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபள்ளி என்கிற கிராமத்தில் பெண்கள் பகலில் நைட்டில அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தோகலபள்ளி என்ற கிராமத்தில் அதிகளவில் வட்டி என்கிற இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் இனத்திற்கு என 9 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் கூறுவதே வாக்கு என்று வட்டி இன மக்கள் மறுக்காமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், தோகலபள்ளி கிராமத்தில் உள்ள பெண்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய வட்டி இன தலைவர்கள் தடை விதித்துள்ளனர். அதையும் மீறி நைட்டி அணிபவர்களுக்கு ரூ.2000 அபராதமாகவும், அதனை தெரியப்படுத்தினால் ரூ.1000 சன்மானமாகவும் வழங்கப்படும் என்று வட்டி இன தலைவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்புக்கு வட்டி இன பெண்கள் சிலர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

You'r reading இது என்னடா புதுசா இருக்கு.. பகல்ல நைட்டி போட்டா அபராதமாம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படியே புறக்கணிப்பதா? ஸ்டாலின் மீது திருநாவுக்கரசர் காட்டம் -Exclusive

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்