காஷ்மீர் பத்திரிக்கையாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக்கொலை

Pakistan terrorist shotted kashmir journalist killed

ஜம்மு-காஷ்மீரில் "ரைசிங் காஷ்மீர்" பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியை படுகொலை செய்த தீவிரவாதி நவீத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியாகும் "ரைசிங் காஷ்மீர்" பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளரின் பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட மூவர் அடையாளம் காணப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த நவீத் ஜூட். இவர், ஏற்கனவே போலீஸ் காவலில் இருந்து தப்பியவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவருக்கும் இதில் தொடர்பில்லை என போலீஸார் அவர்களை விடுதலை செய்தது.

இந்த நிலையில் புகாரி கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி நவீத் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

You'r reading காஷ்மீர் பத்திரிக்கையாளரை படுகொலை செய்த தீவிரவாதி சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை- தமிழகத்துக்கு அநீதி: வைகோ ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்