31 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட்!

PSLV-C43 successfully launches HysIS and 30 customer satellites

31 செயற்கைக் கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட்.

புவிசார் ஆய்வுக்கான்அதிநவீன ஹைசிஸ் செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இது 380 கிலோ எடை கொண்டது.

ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் எனும் இந்த செயற்கைகோள் வேளாண்மை, வனம், கடலோர பகுதி, நீர் நிலைகள், மண்வளம் என புவிசார் அனைத்து ஆய்வுகளுக்கும் பயன்படக் கூடியது.

இதனுடன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் 30 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்திலிருந்து 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

 

You'r reading 31 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளம் பெண் வீட்டில் இருந்து விஷால் சுவர் ஏறி குதித்த விவகாரம்...புகார் கூறிய பெண் மீது வழக்கு பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்