ஒரு கேப்டன் இப்படியா நடந்துகொள்வது! கோலிக்கு கிளம்பிய எதிர்ப்பு

Disgraceful Kohli wearing shots slammed cricket fans

ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தின் போது டாஸ் போடுவதற்காக இந்திய கேப்டன் விராட் கோலி ஷாா்ட்ஸ் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ட- 20 போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவின் உள்ள உள்ளூா் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் நேற்று விளையாடியது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலியா அணி லெவன் கேப்டனும் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனா். அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் கேப்டன் சாம் வொய்ட்மேன் தனது அணி சீருடையுடன் வந்திருந்தாா்.

அதே நேரம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஷாா்ட்ஸ் அணிந்து வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்தியா, ஆஸ்திரேலியா தொடரை  பல்வேறு நாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் ரசிகா்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் விராட் கோலி இவ்வாறு வந்தது கண்டிக்கத்தக்கது என்று ரசிகா்கள் பலர் தங்களது எதிர்ப்பை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

மேலும், இதனை பிசிசிஐ-யும் தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

You'r reading ஒரு கேப்டன் இப்படியா நடந்துகொள்வது! கோலிக்கு கிளம்பிய எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு வேளை உணவுக்காக தண்ணீரில் நீந்தி வந்த சிறுவன்! டெல்டாவின் நிலைமை இது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்