மீரா குமாரை சந்திக்க மறுத்த சந்திரசேகர ராவ்

மீரா குமாரை சந்திக்க மறுத்த சந்திரசேகர ராவ்

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி மீரா குமாரை களமிறக்கியுள்ளது. இருவருதே தலீத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இருவரும் ஆதரவு திரட்டி வரும் நிலையில், மீரா குமாரை சந்திக்கத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மறுத்துள்ளார்.

 

 

திங்கட்கிழமை ஹைதரபாத் வந்த மீரா குமார், சந்திரசேகரராவை சந்திக்க எழுத்து மூலமாக அனுமதி கேட்டுள்ளார். அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்திரசேகர ராவுக்கு மீராகுமார் போன் செய்துள்ளார். அவரின் செல்போன் அழைப்பையும் சந்திரசேகரராவ் எடுக்கவில்லை.

தெலுங்குதேச பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் உத்தம்குமார் ரெட்டி கூறுகையில், '' மீராகுமாரை சந்திரசேகர ராவ் சந்திக்க மறுத்தது துரதிருஷ்டவசமானது. மீராகுமார் நாடளுமன்றத் தலைவராக இருந்த போதுதான், ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்தைப் பிரிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகரராவ் இருக்கிறார் என்பதை மறந்து விடக் கூடாது '' என்றார்.

You'r reading மீரா குமாரை சந்திக்க மறுத்த சந்திரசேகர ராவ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'அன்புக்கு மொழி கிடையாது' ட்வீட்டரில் ரஹ்மான் நெகிழ்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்