முதல்ல ராமர் கோயில்.. அப்புறம் தான் கூட்டணி பேச்சு! பா.ஜ.க.வுக்கு சிவசேனா கண்டிஷன்

Shiv Sena-BJP alliance with Condition to build Ramar temple

ராமர் கோயில் கட்டுவது குறித்து முடிவெடுக்காவிட்டால் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளால் சமாளிக்க திணறி வருகிறது பா.ஜ.க மேலிடம் . பீகாரில நிதீஷ் குமார், பஸ்வானிடம் பல கட்ட பேச்சுக்குப் பின் ஒரு வழியாக சீட் பேரம் முடிவுக்கு வந்தது. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி சேருமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தாண்டு ஆரம்பம் முதலே தனித்துப் போட்டி என்றே கூறி வருகிறார் உத்தவ் தாக்கரே.

ஆனால் பா.ஜ.க.வோ சிவசேனாவுடன் கூட்டணிக்கு விரும்புகிறது. அமித் ஷாவும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட, கூட்டணிக்கான நிபந்தனைகளை விதித்துள்ளார் உத்தவ் . அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

ராமர் கோயில் விவகாரத்தில் பா.ஜ.க தொடர்ந்து வெற்று கோசமிட்டு இந்துக்களை ஏமாற்றி வருகிறது. இந்துக்கள் அப்பாவிகளாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய முட்டாள்கள் அல்ல என்பதை பா.ஜ.க.புரிந்து கொள்ள வேண்டும் என மிரட்டல் தொனியில் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். ராமர் கோயில் விவகாரத்தில் சிவசேனாவின் மிரட்டல் பா.ஜ.க.வுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading முதல்ல ராமர் கோயில்.. அப்புறம் தான் கூட்டணி பேச்சு! பா.ஜ.க.வுக்கு சிவசேனா கண்டிஷன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிறிஸ்துமஸின் நாற்பது அடி ரகசியம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்