ஆன்மீகப் பயணத்தின்போது ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை

3 years jail for camphor on train during spiritual journey

ரயிலில் ஆன்மீகப் பயணத்தின்போது, கற்பூரம் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்வேயின் சட்ட விதிகளின்படி ரயிலில் தீப்பெட்டி, கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது எடுத்துச் செல்லக்கூடாது. ஆனால், இந்த விதிகளை மீறி, சமீபத்தில் ஆன்மிக பயணத்துக்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரியவந்த ரயில்வே துறை, கற்பூரம் உள்பட தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கையாண்டாள் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் பயணிகள் நடந்துகொள்ள வேண்டும் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடி பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்காக, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகார்களுக்கு பயணிகள் 182 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

You'r reading ஆன்மீகப் பயணத்தின்போது ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடரும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்