நடுவானில் விமானத்தில் நிர்வாண கலாட்டா - விமான பயணி கைது!

Passenger strips naked mid-air on Lucknow-Dubai Air India flight

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஆடைகளைக் கலைந்து விட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்ட பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து உ.பி. மாநிலம் லக்னோவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 150 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுவானில் திடீரென பயணி ஒருவர் நிர்வாணமாக விமானத்திற்குள் ஆட்டம் போட்டதால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே விமான ஊழியர்கள் பயணியை மடக்கிப் பிடித்து போர்வையால் உடலை மறைத்தனர். பின்னர் இருக்கையிலும் அந்தப் பயணியை கட்டிப்போட்டுள்ளனர்.

லக்னோவில் விமானம் தரையிறங்கியவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைதான பயணி குறித்த முழுத் தகவல் வெளியாகவில்லை.

 

You'r reading நடுவானில் விமானத்தில் நிர்வாண கலாட்டா - விமான பயணி கைது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நானும் பிரதமரானது ஒரு ஆக்சிடென்ட் தான் - மன்மோகன்சிங் பற்றிய படம் குறித்து தேவேகவுடா கமெண்ட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்