ராஜஸ்தானின் அனுபவ வீரர்களை சாய்த்த கொல்கத்தாவின் இளம் பௌலர்கள்!

Kolkatas young bowlers beat Rajasthans experienced batsmen!

2020 ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டது. தங்கள் அணியின் வெற்றிக்கு சிவம் மாவி, கம்லேஷ் நாகர் கோட்டி போன்ற இளம் பந்துவீச்சாளர்களின் எழுச்சியே காரணம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மான் கில் 47 ரன்கள் (34 பந்துகள்), இயான் மோர்கன் 34 ரந்கள் (23 பந்துகள்) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடினர். நிதிஷ் ராணா 22 ரன்களும், ரஸ்ஸல் 24 ரன்களும் எடுக்க மொத்தத்தில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், ராஜ்பூட், உனகட், டாம் கர்ரன், ராகுல் திவேதியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முந்தைய போட்டிகளில் அபாரமாகப் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் எளிதாக இலக்கை எட்டிவிடுவர் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள், ராஜஸ்தான் அணியினர் ரன்களை சேர்க்க முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் பந்து வீசினர்.

கேப்டன் ஸ்மித் 3 ரன்கள், அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 8 ரன்கள், அனுபவ வீரர் பட்லர் 21 ரன்கள், ராபின் உத்தப்பா 2 ரன்கள் என்று சொற்ப ரன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் சார்பில் டாம் கர்ரன் மட்டும் 36 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணியின் சிவம் மாலி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித்தை கம்மின்ஸ் வீழ்த்தினார். ராபின் உத்தப்பா, பராக் ஆகியோரை கம்லேஷ் நாகர் கோட்டியும், அண்மை போட்டிகளில் அபாரமாக ஆடிய திவேதியாவை வருண் சக்கரவர்த்தியும் ஆட்டமிழக்கச் செய்தனர். மொத்தத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 20 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சிவம் மாவி, சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரின் 13வது ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

You'r reading ராஜஸ்தானின் அனுபவ வீரர்களை சாய்த்த கொல்கத்தாவின் இளம் பௌலர்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எம் பேரு மீனா குமாரி பாடல் கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் திடீர் புகார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்