அட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி?

நேற்றை ஆட்டத்தில் தோனி அடித்த டைவ் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. பிட்னஸ் இல்லை என்று சொல்லுபவர்களின் விமர்சனங்களுக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 3 போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இந்த போடடியில் ஜடேஜாவின் கேட்ச் பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல தோனியின் டைவ் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க தோனி டைவ் அடித்து க்ரீஸை எட்டினார். இதுதொடர்பான போட்டோ நேற்று வைரல் ஆனது. கடந்த சீசனை காட்டிலும் தோனி உடல் ரீதியாக மிகவும் உற்சாகமாக களத்தில் செயல்பட்டு வருகிறார்.

நேற்றை போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய தோனி, “நான் எப்படி விளையாடுவேன் என்பதை 24 வயதிலும் கியாரண்டி கொடுக்க முடியாது. 40 வயதிலும் கொடுக்க முடியாது. ஆனால், என்னை பார்த்து இவர் விளையாட பிட்னஸ் இல்லை என யாரும் சொல்லிவிடக் கூடாது. வயசு ஆக ஆக பிட்னஸ் ஆக இருப்பது மிகவும் சிரமமான விஷயம். இளம் வீரர்கள் இருப்பது போல் என்னுடைய பிட்னஸை வைத்துக் கொள்வேன்.

அவர்கள் போல் வேகமாக ஓடுவது மிகவும் சவாலான ஒன்று” என்று கூறினார். தோனியின் நேற்றை டைவ் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இருப்பினும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முக்கியமான இறுதிக்கட்டத்தில் தோனி ரன் அவுட் ஆவதற்கு முன் இதே மாதிரி டைவ் அடித்திருந்தால் ரன் அவுட்டிலிருந்து தப்பித்திருப்பார். ஆனாலும் அது எதிர்பாராத விதமாக நேராக ஸ்டம்பிப்பில் அடிக்கப்பட்டதால் அவர் அவுட் ஆனார். `அன்னைக்கு இத பண்ணிருக்கலாமே தல என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

You'r reading அட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை? – என்ன நடந்தது வேலூரில்.. பகீர் தகவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்