ஸ்டவ் இல்லாமல் சூரிய ஒளியில் ஒரு நிமிடத்தில் ஆபாயில் தயார்!

Dubai man cooks egg on road in sweltering heat

க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 50 டிகிரி செல்ஸியசுக்கு மேல் வெப்ப நிலை நிலவினால் விடுமுறை அளிக்க வேண்டும். அங்கு நிலவும் வெப்பத்தின் அளவை உலகுக்கு காட்ட நினைத்த இளைஞர் ஒருவர் சாலையிலேயே ஆபாயில் போட்டுக் காட்டியுள்ளார். சாலையில் ஆபாயில் வேகும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வீடியோவில், ''இந்த மாதிரி சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் '' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டவ் இல்லாமல் வெறும் தரையில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து போடுகிறார். பின்னர், அதன் மீது மிளகு , உப்பு போன்றவற்றை தூவுகிறார். ஒரு நிமிடத்தில் ஆபாயில் ரெடியாகிறது. தற்போதையை நிலவரப்படி அமீரகத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவுகிறது. விரைவில் 49 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

 

You'r reading ஸ்டவ் இல்லாமல் சூரிய ஒளியில் ஒரு நிமிடத்தில் ஆபாயில் தயார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்; 200 நோட்டு மீது கவனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்