சிறைத்துறை நிலத்தை ஆக்கிமிரத்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம்-மு.க.ஸ்டாலின்

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சிறைத்துறை நிலத்தை ஆக்கிமிரத்துள்ளது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து அக்டோபர் 3ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு, தஞ்சை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியும் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்துளார்.

30 ஆண்டுக்கும் மேலாக அரசு நிலத்தை ஆக்கிமிரத்துள்ளதோடு, உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை மதிக்காமல், அரசு நிலத்தை தக்கவைத்துக் கொள்ளும் பேராசையுடன் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு முதலமைச்சர்,வருவாய்த்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போகக் கூடாது என கூறியுள்ள மு.க.ஸ்டாலின்,சட்டப்படி தீர்ப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் வெளியேற மறுத்து 22 வருடங்களுக்கு மேல் பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர் இந்த சமூக விரோதப் போக்கு கல்வி நிலையத்திற்கு உகந்த அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ளார்.

You'r reading சிறைத்துறை நிலத்தை ஆக்கிமிரத்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம்-மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரக்கோணம் கடற்படைத் தளத்தில் விழுந்து நொறுங்கிய பயிற்சி ஹெலிகாப்டர் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்