திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கும் மழை

Heavy Rain in Dindigul

உள்மாவட்டங்கள் மையம் கொண்டிருந்த வலுகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து மாவட்டத்தின பல பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்டது.

வங்கக் கடலில் கடந்த 18-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வலுவடைந்து கரைகளை கடந்தது.

இக்குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது உள்மாவட்டங்களில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது.

இதனிடையே திண்டுக்கல்லில் இன்று பிற்பகல் 1 மணிக்கு லேசான மழை தூறல் தொடங்கியது. பின்னர் இது கனமழையானது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் பல பகுதிகளில் மின்சரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் இயல்புவாழ்க்கை இதுவரை பாதிக்கப்படவில்லை.

You'r reading திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கும் மழை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு பேனரை பிடிச்சதுக்காக ட்விட்டர் சிஇஓவை ஒட்டுமொத்தமாக வெச்சு செய்த பிராமணர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்