மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு : தொழிலதிபர் கைது

மதுரையில் 21 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டதாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

மதுரை அழகப்பா நகர்ப் பகுதியில் சமுத்திரா பாலிமர் மற்றும் கலர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கனக ரத்தினம் போலி ரசீதுகளை சமர்ப்பித்துஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலப் பொருட்களை விற்பனை செய்த போது போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்து ஜிஎஸ்டி கட்டாமல் 21 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்டிருந்தது.

மதுரையில் உள்ள மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் கனகரத்தினம் கைது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

You'r reading மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு : தொழிலதிபர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதி கோவிலில் பக்தர்களை பதறவைத்த பாம்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்