14 ராணுவ வீரர்களுடன் மாயமான ரஷ்ய ஜெட் விமானம்

14  ராணுவ வீரர்களுடன் சிரியாவில்  சென்ற ரஷ்ய ஜெட் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் மாயமாகியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யாஆதரவு அளிக்கிறது. கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள் பகுதிகளில்  அடிக்கடிவான்வழியே தாக்குதலும் நடத்துகிறது. 

இச்சூழலில் சிரியா நாட்டு எல்லையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஒரு  ரஷ்ய ஜெட் விமானம் திங்கட்கிழமை சிரியாவின் ஹிமியம் விமானப்படைதளத்திற்கு திரும்பியுள்ளது. சிரியா கடற்கரையில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் 35 கிமீ தொலைவில் பயணத்துக்கொண்டிருந்த அந்தவிமானம்  திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

நவம்பர் 2015ம் ஆண்டு சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர் விமானங்கள்  தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறப்பதாக துருக்கி அரசு அடிக்கடி குற்றம்சாட்டிவந்தது. 

ரஷ்யாவின் ஆளில்லா  சுகோய் எஸ்.யூ.24 ரக போர் விமானத்தை துருக்கியின்  எப்.16 ரக போர் விமானம் ஏவுகணை துருக்கி ராணுவம்சுட்டுவீழ்த்தியது  குறிப்பிடதக்கது.

தற்போது மாயமான அந்த விமானத்தில் 14 ரஷ்ய ராணுவ வீரர்கள்  பயணித்துள்ளனர். விமானத்தைத் தேடும் பணி ரஷ்ய அரசு தரப்பில்  மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்  எனவும் கூறப்படுகிறது.

You'r reading 14 ராணுவ வீரர்களுடன் மாயமான ரஷ்ய ஜெட் விமானம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சலா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்