பெரம்பலூர்: 4 கோடி ரூபாய் பல்லாரியை பதுக்கிய 5 பேர் கைது...!

பெரம்பலூரில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்லாரி வெங்காயத்தை பதுக்கி வைத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்லாரி வெங்காயம் பெருமளவு ப துக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தோட்டக்கலை துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கோழி பண்ணை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 4 கோடி மதிப்பிலான 483 டன் பெல்லாரி வெங்காயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொர்பாக பெரம்பலூரை சேர்ந்த வெங்காய வியாபாரி பாலாஜி என்பவரை திருச்சி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு போலீஸார் கைது செய்தனர். மேலும் பதுக்கலுக்கு துணையாக இருந்த மேலும் 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர். வெங்காயத்தை சட்டவிரோதமாக பதுக்க வாடகைக்கு இடம் கொடுத்ததாக இவர்கள் மீது அத்தியாவசிய பொருள் பதுக்கல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டிருந்தது.

இவர்கள் 5 பேரும் இன்று காலை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கருப்புசாமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.எனினும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் திருச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

You'r reading பெரம்பலூர்: 4 கோடி ரூபாய் பல்லாரியை பதுக்கிய 5 பேர் கைது...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈரோடு சந்தையில் 75 சதவீத ஜவுளி விற்பனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்